பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய தடகளம்: 2-வது பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி
|16 July 2023 5:39 PM IST
200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
பாங்காக்,
24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி, 23.13 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்த தொடரில் ஜோதி வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். நடப்பு தொடரில் ஏற்கனவே பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.